பங்குச் சந்தை என்றால் என்ன




பங்குச் சந்தை என்பது ஒரு பெரிய நிறுவனம் தொழில் தொடங்க
தன்னுடைய சொந்த முதலீட்டோடுபொது மக்களையும் பங்குதார்ரகளாக சேர்த்துக்கொண்டு வியாபாரம் நடத்துவது ஆகும்இதில் இலாபமும்,
நட்டமும் இருதரப்பினரையும் சாரும்.

நீங்கள் புதியதாக ஒரு தொழில் ஆரம்பிக்க நினைக்கிறீர்கள் என்று
வைத்துக்கொள்வோம்அதற்கு முதலீடு தேவைப்படும் இல்லையாஅந்த முதலீடு சிறிய அளவில் இருப்பின் எப்படியோ சமாளித்து
உங்களுடைய பணத்தையே முதலீடாக போட்டுவிடுவீர்கள்.

செய்யும் தொழில் அதிக மதிப்புடையாக இருப்பின்,அவற்றிற்கு அதிகமான முதலீடு தேவைப்படுகிறதுஅவ்வாறான சமயங்களில் உங்களுடைய
 சொந்தப் பணத்துடன்வேறு எங்கேனும் கடன் வாங்கி அதை செய்ய
 முற்படுவீர்கள்.  இது ஒரு வகை.

அதே தொழில் அல்லது வியாபாரம் செய்ய மிகப்பெரிய முதலீடு
 (பல கோடி ரூபாய் மதிப்பீட்டில்தேவைப்படுகிறதுஆனால் போதுமான
பணம் உங்கள் கையில் இல்லை.  வியாபாரத்தை தொடங்கினால்
நல்ல இலாபம் கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியும்.

இதுபோன்ற சமயங்களில் உதவுபவைதான் பங்குகள் நீங்கள்
 உங்கள் நிறுவனத்திற்கான பங்குகளை வெளியிடலாம்உதாரணமாக
 உங்களுடைய நிறுவனத்திற்கு தொழில் அல்லது வியாபாரம் தொடங்க
 ரூபாய் 2 கோடி தேவைப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம்.

இப்பொழுது நீங்கள் அதற்கான பங்குகளை வெளியிடலாம்.
அதாவது  இரண்டு கோடி ரூபாயை இரண்டு லட்சம் பங்குகளாக பிரித்து,
 அவற்றை இருபது ரூபாய் முக மதிப்பாக்கி (Face Value)
பொது மக்களிடம் விற்கலாம்அவர்கள் தங்களுடைய வசதிகளுக்கேற்ப
அப்பங்குகளில் முதலீடு செய்வார்கள்அதாவது அவர்களும் நீங்கள்
தொடங்கும் தொழிலில் 'பங்காளிகள்'ஆகிவிடுகின்றனர்.

இவ்வாறு செய்யும்பொழுதுநிறுவனம் தொடங்கும் வியாபாரம் அல்லது
தொழில் கிடைக்ககூடிய இலாபத்தை பங்குதாரர்களுக்கு பிரித்துக்
 கொடுக்கும்இதற்கு இலாப பங்கு (டிவிடெண்ட் -Dividend) என்று பெயர்.

இதில் நஷ்டம் ஏற்பட்டாலும் பங்குதாரர்களுக்கும் பங்கு உண்டுஅதாவது
எவ்வளவு நஷ்டம் ஏற்படுகிறதோஅந்தளவிற்கு பங்குகளில்
முதலீடு செய்யப்பட்ட பணமும் நஷ்டமடையும்.

சுருக்கமாகச் சொல்வதெனில் குறிப்பிட்ட அந்த நிறுவனம் தொழில்
அல்லது வியாபாரம் தொடங்க பொதுமக்களையும் பங்குதார்ரகளாக
சேர்த்துக் கொள்கிறதுதொடங்கிய வியாபாரத்தில் இலாபம் அடைந்தால்
அந்த இலாபத்தில் அவர்களுக்குப் பங்கு உண்டுஅதே சமயம் நஷ்டம்
வந்தாலும் அதிலும் அவர்களுக்கும் பங்கு உண்டு
 (Capital Loss).அவ்வளவுதான்